அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது !

பார்வையற்றோர் பிரிவு குழந்தைகள் பிரிவு பருவ இதழ்கள் பிரிவு
தமிழ் நூல்கள் பிரிவு ஆங்கில நூல்கள் பிரிவு

Jan 2, 2011

வசதிகள்



நமது நூலகம் 1250 பேர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்க கூடிய இடவசதி கொண்டது.

கலையரங்கம் :




முற்றிலும் குளிரூட்டப்பட்ட 50000 சதுர அடி பரப்பளவு கொண்ட மிகப்பெரும் தனி கலையரங்கம் உள்ளது. 1100 நபர்கள் அமரக்கூடிய இருக்கை வசதிகள் இதன் சிறப்பம்சம் ஆகும்.




திறந்தவெளி கலையரங்கு :

800 பேர் அமரக்கூடிய திறந்தவெளி ஒலி-ஒளி அரங்கு நூலக வளாகத்தினுள் அமைந்துள்ளது.






கருத்தரங்கு கூடம்:
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 151 நபர்கள் அமரும் வசதி கொண்ட கருத்தரங்கு நூலகத்தினுள் அமைந்துள்ளது.
மேலும் 30 பேர் அமரக்கூடிய சிறிய கருத்தரங்குகள் நூலகத்தின் தளங்களில் அமைந்துள்ளன. நூல் வெளியீட்டு அறைகளும் கருத்தரங்க அறைகளும் உள்ளன.


வாகன நிறுத்துமிடம்:


இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான பாதுகாப்பான பரந்த அமைவிடம் உள்ளது. இதில் 400 நான்கு சக்கர வாகனங்களும், 1200 இரு சக்கர வாகனங்களும் நிறுத்தும் வசதி உள்ளது.


மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக...:
மாற்றுத் திறனாளிகள் நூலகத்தை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களின் வசதிக்காக பிரத்யேக கழிவறைகள் மற்றும் சரிவுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நூலகத்தில் அவர்களின் இயக்கத்தை எளிதாக்க சக்கர நாற்காலிகள் உள்ளன.




சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு :


பயனாளர்கள் தங்கள் சொந்த நூல்களை கொண்டு வந்து படிப்பதற்கான தனி பிரிவு உள்ளது. உரிய அனுமதியுடன் வாசகர்கள் தங்கள் புத்தகங்களை குறிப்பிட்ட பகுதிக்குள் பயன்படுத்தலாம்.




மின்தூக்கி மற்றும் கழிவறை:
நூலகத்தின் ஒவ்வொரு தளத்திலும் மின்தூக்கி மற்றும் கழிவறை அமைந்துள்ளது.

அழகிய முற்றம்:
இயற்கை ஒளி புகும் வகையில் அழகிய முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் தொடங்கப்படவுள்ள வசதிகள்:
இணைய மின் நூலகம்:
கணினியில் சேமிக்கப்பட்ட தகவல்கள் அடங்கிய இணைய மின் நூலகம் விரைவில் அமைய உள்ளது. புத்தகங்களுடன் 2 லட்சத்துக்கும் அதிகமான மின் புத்தகங்களும், 20000 -க்கும் மேற்பட்ட மின் சஞ்சிகைகளும் அதில் இடம்பெறவிருக்கின்றன.


உணவக வசதி:
நமது நூலகம் வாசகர்களின் அறிவுப்பசி ஆற்றுவதோடு, அவர்தம் ஆரோக்கியத்திற்கும், தூய்மையான சுவையான உணவுகளையும் பானங்களையும் வழங்கும் உணவு விடுதி வரவிருக்கிறது.


ஆய்வு செய்வோருக்கான விடுதி வசதி:
வளாகத்தின் உள்ளே ஆய்வு மேற்கொள்ளும் இந்திய, அயல் நாட்டு வாசகர்களுக்கான தரமான விடுதி வசதி அமையவிருக்கிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Thanks for Your Visit : Blog & Website Team, ACL