அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒன்பது தளங்களுடன் பிரம்மாண்டமாக செயல்படுகிறது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் தமிழகத்திற்கு அழகு சேர்க்கிறது. மேலும் இந்நூலகம் சர்வதேச தரத்துடன் அமைந்துள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து தரப்பு மக்களும் வருகை தருகிறார்கள். இந்நூலகத்தின் ஒவ்வொரு தளமும் தனிச் சிறப்புடன் சிறந்து விளங்குகிறது
தரைத்தளம்
தரைத் தளத்தில் வரவேற்பறையும், சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு, மெய்ப்புல அறைகூவலர் (பார்வையற்றோர்) பிரிவு மற்றும் மாநாட்டுக் கூடமும் அமைந்துள்ளன.
சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு :
பயனாளர்கள் தங்கள் சொந்த நூல்கள் மற்றும் மடிக்கணினிகளை கொண்டு வந்து படிப்பதற்கான தனி பிரிவு உள்ளது. உரிய அனுமதியுடன் வாசகர்கள் தங்கள் புத்தகங்களை குறிப்பிட்ட பகுதிக்குள் பயன்படுத்தலாம்.
மெய்ப்புல அறைகூவலர் பிரிவு
மெய்ப்புல அறைகூவலர் பிரிவு
முதல் தளம்
முதல் தளத்தில் குழந்தைகள் பிரிவும் நாளிதழ்கள் பிரிவும் செயல்படுகின்றன.
நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு
கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, சமயம், மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு சம்மந்தமான பருவ இதழ்களும் உள்ளன. உள் நாடு மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் பருவ இதழ்கள் பெறப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளன.
இங்கு பருவ இதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என்று பகுக்கப்பட்டு எளிய முறையில் அலமாரியில் வைக்கப்பட்டுள்ளன. எளிதில் அடையாளம் கண்டு மகிழ்ச்சியுடன் படிக்க முடிகிறது. கூடுதலாக பழைய நாளிதழ்களும், பருவ இதழ்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
குழந்தைகள் பிரிவு
இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் அவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் குழந்தைகளுக்காகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் பிரிவு அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் உள்ளது. இப்பிரிவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். பொது மக்களும் பார்வையாளர்களாக வந்து செல்லலாம்.
குழந்தைகள் பிரிவின் நுழைவாயிலின் எதிர்புறம் இயற்கை எழில் கொஞ்சும் செயற்கை மரமும், அதில் அமர்ந்திருக்கும் பறவைகளும் மற்றும் குரங்குகளும் காண்போரை மகிழ வைக்கின்றன.
குழந்தைகள் கலை நிகழ்ச்சிக்கென்று சிறிய மேடையும் அமைக்கப் பட்டுள்ளது.
இப்பிரிவில் வைக்கப்பட்டுள்ள நூல்கள் குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுபவையாகவும் உள்ளன.
இங்கு வைக்கப்பட்டுள்ள கணினிகளின் வழியாக குழந்தைகள் நீதிக் கதைகள் கேட்கவும், விரும்பும் விளையாட்டுகளை விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கிருந்து குழந்தைகள் செல்ல மனதில்லாமல் பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் செல்லும் போது இப்பிரிவின் சிறப்பை நாம் சொல்ல தேவையில்லை. சுருக்கமாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவை குழந்தைகளின் சொர்க்கம் எனலாம்.
இரண்டாவது தளம்
இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் அ மற்றும் ஆ என இரண்டு பிரிவுகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன.
அண்ணா எழுதிய மற்றும் அண்ணாவைப் பற்றிய நூல்கள்
பெரியாரின் நூல்கள்
பொது அறிவு நூல்கள்
கணினி அறிவியல்
கலைக் களஞ்சியம்
தொகுப்பு நூல்கள்
இதழியல்
தத்துவம் மற்றும் உளவியல்
சுய முன்னேற்ற நூல்கள்
சமய நூல்கள்
ஆன்மீகம், சமூகவியல், அரசியல், பொருளியல்
சட்டம், வணிகவியல், மொழியியல், நாட்டுப்புறவியல்
தமிழ் அகராதி, இலக்கண நூல்கள், அறிவியல், வானியல், கணிதவியல், தொழில் நுட்பவியல்,மருத்துவம், பொறியியல், வேளாண்மை, நுண்கலைகள்
திரைப்படவியல், விளையாட்டு பற்றிய அனைத்து நூல்களும் உள்ளன.
சங்க இலக்கிய நூல்கள்
சிற்றிலக்கியங்கள்
கவிதைகள்
கதைகள்
கட்டுரைகள்
சிறு கதைகள்
புதினம்
நாடகம்
பயணக் கட்டுரைகள், கடிதங்கள்
நகைச்சுவை நூல்கள்
வாழ்க்கை வரலாறு, இலங்கைத் தமிழர் வரலாறு
புவியியல் மற்றும் அரிய நூல்கள் போன்றவை மிகச்சிறந்த முறையில் பகுத்து வைக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது தளம்
நான்காவது தளம்
இத்தளத்தில் பொருளியல்,, சட்டம்,, பொது நிர்வாகம், கல்வி,, வணிகவியல்,, மொழியியல்,, மற்றும் இலக்கியம் தொடர்பான நூல்கள் உள்ளன.
ஐந்தாம் தளம்
இத்தளத்தில் பொது அறிவியல், கணிதவியல்,, வானவியல், இயற்பியல்,, வேதியியல்,, புவியமைப்பியல்,, உயிரியல்,, மற்றும் மருத்துவம் தொடர்பான நூல்கள் உள்ளன.
ஆறாம் தளம்
இத்தளத்தில் பொறியியல், வேளாண்மை,, உணவியல்,, மேலாண்மை,, கட்டிடக்கலை,, நுண்கலை,, மற்றும் விளையாட்டு தொடர்பான நூல்கள் உள்ளன.
ஏழாம் தளம்
இத்தளத்தில் வரலாறு,, புவியியல்,, வேதியியல்,, சுற்றுலா & பயண மேலாண்மை,, மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் உள்ளன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.