அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது !

பார்வையற்றோர் பிரிவு குழந்தைகள் பிரிவு பருவ இதழ்கள் பிரிவு
தமிழ் நூல்கள் பிரிவு ஆங்கில நூல்கள் பிரிவு

Jan 1, 2011




அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழக மக்களால் அன்புடன்"அண்ணா" என்றழைக்கப்படும் முன்னாள் தமிழக முதல்அமைச்சர் மாண்புமிகு. சி. என். அண்ணாதுரை அவர்களின்102 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, 2010 -ஆம் ஆண்டுசெப்டெம்பர் 15 -ஆம் தேதியன்று முன்னாள் தமிழக முதல்அமைச்சர் டாக்டர். மு.கருணாநிதி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையான நூலகமான நமது நூலகத்தின் கால்கோள் விழா முன்னாள் தமிழக முதல் அமைச்சர் டாக்டர். மு.கருணாநிதி அவர்களால் 2008 -ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16 -ஆம் நாள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது.

நூல்கள் மற்றும் கற்பதில் அண்ணா அவர்கள் கொண்ட பற்று மற்றும் தீராத ஆர்வத்தை மரியாதை செய்யும் பொருட்டு நமது நூலகத்திற்கு அன்னாரின் நூற்றாண்டை நினைவுறுத்தும் விதமாகவும் "அண்ணா நூற்றாண்டு நூலகம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

3.75 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள நம் நூலகம் தரைதளம் நீங்கலாக 8 தளங்களை கொண்டது. தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த 5 லட்சம் புத்தகங்களை தன்னகத்தே கொண்டுள்ள நமது நூலகம், மிகவும் குறுகிய காலத்தில் 12 லட்சம் புத்தகங்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது.
நமது நூலகம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நமது நூலகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக "உலக இணைய மின் நூலகத்துடன்" (World Digital Library)இணைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மூலம் நம் பண்பாட்டை உலகறியவும், உலகப் பண்பாட்டை நாமறியவும் சிறப்பானதொரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் 31 மாவட்ட நூலகங்களையும் கன்னிமரா நூலகத்துடன் இணைக்கும் கணினி இணைப்பு தற்போது செயலாக்கத்தில் உள்ளது. இந்த அனைத்து இணைப்புகளும் நமது "அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன்" இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

1 comment:

  1. Really supper and all the best for all peoples development in all over world.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.

Thanks for Your Visit : Blog & Website Team, ACL