அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது !

பார்வையற்றோர் பிரிவு குழந்தைகள் பிரிவு பருவ இதழ்கள் பிரிவு
தமிழ் நூல்கள் பிரிவு ஆங்கில நூல்கள் பிரிவு

Apr 16, 2011

உற்சாக வரவேற்பை பெற்றது "கடல் பூதம்"

மது நூலகத்தில் 16.04.2011 மாலை 5 மணிக்கு முனைவர். வேலுசரவணன் மற்றும் குழுவினர் நிகழ்த்திய குழந்தைகளுக்கான நாடகம் கடல் பூதம் சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்ச்சியான இதனை இரு நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கண்டுகளித்தனர். இதில் குழந்தைகள் மிகவும் உற்சாகத்துடன் ஆரவாரமாக குரல்களை எழுப்பி மகிழ்ந்தனர். குழந்தைகளை மட்டுமல்லாது பெரியவர்களையும் கவர்ந்த நிகழ்ச்சியாக அமைந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்நிகழ்ச்சியின் நிறைவில் முனைவர். க. அறிவொளி, இயக்குனர், தமிழக பொது நூலக துறை அவர்கள், முனைவர் வேலுசரவணன் மற்றும் குழுவினரை நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். பின்னர் தங்களது கருத்துக்களை தெரிவிக்க குழந்தைகள் போட்டிபோட்டு முன்வந்தனர். இந்நிகழ்ச்சியினை வெற்றியடைய செய்த அனைத்து உள்ளங்களுக்கும் அண்ணா நூற்றாண்டு நூலக நூலகர்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

2 comments:

  1. mr. velu saravanan drama team has been done wonderful performance to childran and adults.their acting was reflects "PADHAL SARKAR, Father of indian drama".

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.

Thanks for Your Visit : Blog & Website Team, ACL