
டாக்டர். சந்தியா ரூபன் அவர்கள் நிகழ்ச்சியின் துவக்கத்தில் யானை பற்றிய சிறு குறிப்பினை குழந்தைகளுக்கு வழங்கி, குழந்தைகளை, யானை காதை ஆட்டுவது போலவும், துதிக்கையில் தண்ணீர் எடுத்து குளிப்பது போலவும், அருகில் இருப்பவர்கள் மீது சேரை வாரி
இரைப்பது போலவும் நடிக்கச்செய்தார், அதன் பின் "கஜபதி குலபதி" எனும் கதை குழந்தைகளுக்கு நடித்து காண்பிக்கப்பட்டது.
அருணா அவர்கள் தபால்காரன் மற்றும் வயதான பெண்மணி ஆகிய இரு வேடங்களில் நடித்தார். ஹர்ஷா அவர்கள் 'கஜபதி குலபதி' என்ற யானையாக மிகவும் சிறப்பாக தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார்.
மொத்தத்தில் இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சியானது, இதனை கண்ட அனைத்து கண்களுக்கும், காதுகளுக்கும், மேலும் புத்திக்கும் மிகச்சிறந்த விருந்தாக அமைந்தது. நிகழ்ச்சியின் முடிவில் பங்கெடுத்த அனைத்து குழந்தைகளுக்கும் காகிதத்தால் செய்யப்பட்ட யானை முகமூடி டாக்டர். சந்தியா ரூபன் மற்றும் குழுவினரால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை மிகவும் சிறப்பாக வழங்கிய டாக்டர். சந்தியா ரூபன், திருமதி. அருணா, திருமதி. ஹர்ஷா ஆகியோருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
இக்கதையானது திரு. அசோக் ராஜகோபாலன் அவர்கள் எழுதி, துலிப் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட "கஜபதி குலபதி" என்ற புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.