
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கோடை கொண்டாட்டத்தின் ஐந்தாவது நிகழ்ச்சியாக நாட்டிய சங்கமம் என்ற நாட்டிய நிகழ்ச்சி 30/04/2011 அன்று அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை அடையாரைச்சேர்ந்த
"பரத சூடாமணி அகாடமி"யின் குழந்தைகள் பங்கு கொண்டு நடனமாடினர். இந்நிகழ்ச்சியானது மூன்று பூ மொட்டுக்கள் போன்ற குழந்தைகளின் நாட்டியாஞ்சலியுடன் தொடங்கியது, அதனை தொடர்ந்து புஷ்பாஞ்சலி, ஜோதீஸ்வரம், பாம்பு நடனம், மயில் நடனம், நடேச நடனம், ஜிப்சி நடனம், கோலாட்டம், தில்லானா போன்ற நடனங்கள், மங்களத்துடன் நிறைவு பெற்றது.
இந்த பத்து வகையான நடனங்களில் குழந்தைகள் மிகவும் சிறப்புடன் பங்கு கொண்டு தங்களது நடனத்திறமையால் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். இந்நிகழ்ச்சியினை நூலகத்திற்கு வந்திருந்த குழந்தைகள், பெற்றோர்கள், மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அகமும் முகமும் மலர கண்டு ரசித்தனர்.
இதனை கண்டு ரசித்த அடையாரை சேர்ந்த S. பவித்ரா இந்நிகழ்ச்சியை மிகவும் விரும்பியதாகவும் தானும் நடனம் கற்க போவதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியின் முடிவில் இதில் பங்கு கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.