"ஏக்கி தோக்கி" எனும் தலைப்பில் குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சி நமது நூலகத்தில் இன்று (07.05.11) நடைபெற்றது. மராத்தி மொழி வார்த்தைகளான ஏக் (ஒன்று) மற்றும் தோ (இரண்டு) ஆகியவற்றை தலைப்பாக கொண்ட இந்த சிறுவர்களுக்கான கதை இரண்டு சகோதரிகளை பற்றியது. "நல்ல மனமே செல்வத்தை ஈட்டும் கருவி" எனும் நீதியை வலியுறுத்திய இக்கதையை திருமதி. ஷோபனா அவர்கள் சிறப்புற வழங்கினார்.
குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் "Something from Nothing" என்ற தலைப்பில் யூத நீதி கதையொன்றும் இடம் பெற்றது.
கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் ஒருபகுதியான, இந்த நிகழ்ச்சியின் இறுதியில் இடம்பெற்ற கேள்வி-பதில் பகுதியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.