அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது !

பார்வையற்றோர் பிரிவு குழந்தைகள் பிரிவு பருவ இதழ்கள் பிரிவு
தமிழ் நூல்கள் பிரிவு ஆங்கில நூல்கள் பிரிவு

Jan 28, 2011

குடியரசு தின விழா



26-1-2011 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 62 வது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.



அன்று காலை பொது நூலக இயக்ககத்தின் இயக்குனர் முனைவர்.க.அறிவொளி அவர்கள் தேசியக்கொடியேற்றி மரியாதை செய்தார். முன்னதாக இயக்குனர் அவர்களை பொது நூலக இயக்ககத்தின் இணை இயக்குனர் மற்றும் முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (பொ), அண்ணா நூற்றாண்டு நூலகம், திரு.பூ.அ.நரேஷ் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் திரு. மாதேஸ்வரன், சென்னை மாவட்ட நூலக அலுவலர் மற்றும் துணை முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (பொ) அண்ணா நூற்றாண்டு நூலகம், திரு.ராமலிங்கம், உதவி இயக்குனர், பொது நூலக இயக்ககம் மற்றும் நிர்வாக அலுவலர் (பொ) அண்ணா நூற்றாண்டு நூலகம், அண்ணா நூற்றாண்டு நூல்கத்தின் அனைத்து நூலகர்கள், இதர பணியாளர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர். விழாவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.



அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொங்கல் விழா !

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 14.01.2011 அன்று சமத்துவ பொங்கல் விழா, தலைப் பொங்கல் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் திரு.கயல் தினகரன், தலைவர், நூலக ஆணைக்குழு, சென்னை, திரு.கோபண்ணா, துணைத்தலைவர், நூலக ஆணைக்குழு, சென்னை, அறிவொளி, இயக்குநர், பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு அரசு, இயக்குநர், மெட்ரிக் பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு அரசு, ராமலிங்கம், உதவி இயக்குநர், பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு அரசு, திரு. மாதேஸ்வரன், மாவட்ட நூலக அலுவலர், சென்னை, ஆலோசகர்கள் திரு.அல்போன்ஸ், திரு.பன்னீர் செல்வம், திரு.செந்திலன் ஆகியோரும்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அனைத்து நூலகர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு நிகழ்வுகளாக, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சார்ந்த நூலகர்களின் கவிதை வாசிப்பு, நாட்டுப்புறப்பாடல் மற்றும் பரதநாட்டியாலயா, அண்ணா நகர் நாட்டியப்பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் கலந்துகொண்ட பரதநாட்டியாலயா மாணவிகளுக்கு நினைவுப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Jan 23, 2011

பிரிவுகள்



அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒன்பது தளங்களுடன் பிரம்மாண்டமாக செயல்படுகிறது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் தமிழகத்திற்கு அழகு சேர்க்கிறது. மேலும் இந்நூலகம் சர்வதேச தரத்துடன் அமைந்துள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து தரப்பு மக்களும் வருகை தருகிறார்கள். இந்நூலகத்தின் ஒவ்வொரு தளமும் தனிச் சிறப்புடன் சிறந்து விளங்குகிறது



தரைத்தளம்


தரைத் தளத்தில் வரவேற்பறையும், சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு, மெய்ப்புல அறைகூவலர் (பார்வையற்றோர்) பிரிவு மற்றும் மாநாட்டுக் கூடமும் அமைந்துள்ளன.




சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு :
பயனாளர்கள் தங்கள் சொந்த நூல்கள் மற்றும் மடிக்கணினிகளை கொண்டு வந்து படிப்பதற்கான தனி பிரிவு உள்ளது. உரிய அனுமதியுடன் வாசகர்கள் தங்கள் புத்தகங்களை குறிப்பிட்ட பகுதிக்குள் பயன்படுத்தலாம்.

மெய்ப்புல அறைகூவலர் பிரிவு



மெய்ப்புல அறைகூவலர் பிரிவில் பார்வையற்றோர்களுக்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவில் மெய்ப்புல அறைகூவலர்கள் தங்களின் கல்வி தாகத்தைப் போக்கிக்கொள்ளலாம். இப்பிரிவில் 500 க்கும் மேற்பட்ட பிரைய்லி புத்தகங்களும், 400 க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளும் உள்ளன.



முதல் தளம்


முதல் தளத்தில் குழந்தைகள் பிரிவும் நாளிதழ்கள் பிரிவும் செயல்படுகின்றன.



நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு




நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கில் பல நாளிதழ்களும், பருவ இதழ்களும் உள்ளன. தமிழில் வெளியிடப்படும் அனைத்து பருவ இதழ்களும் இங்கு உள்ளது என்பது தனிச்சிறப்பு.
கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, சமயம், மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு சம்மந்தமான பருவ இதழ்களும் உள்ளன. உள் நாடு மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் பருவ இதழ்கள் பெறப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளன.


இங்கு பருவ இதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என்று பகுக்கப்பட்டு எளிய முறையில் அலமாரியில் வைக்கப்பட்டுள்ளன. எளிதில் அடையாளம் கண்டு மகிழ்ச்சியுடன் படிக்க முடிகிறது. கூடுதலாக பழைய நாளிதழ்களும், பருவ இதழ்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.





குழந்தைகள் பிரிவு



முதல் தளத்தில் 15000 சதுர அடிப் பரப்பில் குழந்தைகளுக்கென்று உருவாக்கப்பட்ட நூற்பிரிவு அமைந்துள்ளது.








இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் அவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் குழந்தைகளுக்காகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் பிரிவு அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் உள்ளது. இப்பிரிவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். பொது மக்களும் பார்வையாளர்களாக வந்து செல்லலாம்.




குழந்தைகள் பிரிவின் நுழைவாயிலின் எதிர்புறம் இயற்கை எழில் கொஞ்சும் செயற்கை மரமும், அதில் அமர்ந்திருக்கும் பறவைகளும் மற்றும் குரங்குகளும் காண்போரை மகிழ வைக்கின்றன.


குழந்தைகள் கலை நிகழ்ச்சிக்கென்று சிறிய மேடையும் அமைக்கப் பட்டுள்ளது.


இப்பிரிவில் வைக்கப்பட்டுள்ள நூல்கள் குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுபவையாகவும் உள்ளன.




இங்கு வைக்கப்பட்டுள்ள கணினிகளின் வழியாக குழந்தைகள் நீதிக் கதைகள் கேட்கவும், விரும்பும் விளையாட்டுகளை விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கிருந்து குழந்தைகள் செல்ல மனதில்லாமல் பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் செல்லும் போது இப்பிரிவின் சிறப்பை நாம் சொல்ல தேவையில்லை. சுருக்கமாக அண்ணா நூற்றாண்டு நூலத்தின் குழந்தைகள் பிரிவை குழந்தைகளின் சொர்க்கம் எனலாம்.





இரண்டாவது தளம்


இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் அ மற்றும் ஆ என இரண்டு பிரிவுகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன.






'' பிரிவில்



அண்ணா எழுதிய மற்றும் அண்ணாவைப் பற்றிய நூல்கள்


பெரியாரின் நூல்கள்


பொது அறிவு நூல்கள்




கணினி அறிவியல்


கலைக் களஞ்சியம்


தொகுப்பு நூல்கள்



இதழியல்


தத்துவம் மற்றும் உளவியல்


சுய முன்னேற்ற நூல்கள்


சமய நூல்கள்


ஆன்மீகம், சமூகவியல், அரசியல், பொருளியல்


சட்டம், வணிகவியல், மொழியியல், நாட்டுப்புறவியல்


தமிழ் அகராதி, இலக்கண நூல்கள், அறிவியல், வானியல், கணிதவியல், தொழில் நுட்பவியல்,மருத்துவம், பொறியியல், வேளாண்மை, நுண்கலைகள்


திரைப்படவியல், விளையாட்டு பற்றிய அனைத்து நூல்களும் உள்ளன.






'' பிரிவில்



சங்க இலக்கிய நூல்கள்


சிற்றிலக்கியங்கள்


கவிதைகள்


கதைகள்


கட்டுரைகள்



சிறு கதைகள்


புதினம்


நாடகம்


பயணக் கட்டுரைகள், கடிதங்கள்


நகைச்சுவை நூல்கள்


வாழ்க்கை வரலாறு, இலங்கைத் தமிழர் வரலாறு


புவியியல் மற்றும் அரிய நூல்கள் போன்றவை மிகச்சிறந்த முறையில் பகுத்து வைக்கப்பட்டுள்ளன.





மூன்றாவது தளம்


மூன்றாவது தளத்தில் ஆங்கில மொழியிலான பல புத்தகங்கள் உள்ளன. பொது அறிவு, கணினி அறிவியல்,, நூலகம் & தகவல் அறிவியல், தத்துவம்,, உளவியல், அற இயல் மற்றும் மதம்,சமூகவியல், புள்ளியியல், மற்றும் அரசியல் தொடர்பான நூல்கள் உள்ளன,

நான்காவது தளம்


இத்தளத்தில் பொருளியல்,, சட்டம்,, பொது நிர்வாகம், கல்வி,, வணிகவியல்,, மொழியியல்,, மற்றும் இலக்கியம் தொடர்பான நூல்கள் உள்ளன.




ஐந்தாம் தளம்


இத்தளத்தில் பொது அறிவியல், கணிதவியல்,, வானவியல், இயற்பியல்,, வேதியியல்,, புவியமைப்பியல்,, உயிரியல்,, மற்றும் மருத்துவம் தொடர்பான நூல்கள் உள்ளன.



ஆறாம் தளம்


இத்தளத்தில் பொறியியல், வேளாண்மை,, உணவியல்,, மேலாண்மை,, கட்டிடக்கலை,, நுண்கலை,, மற்றும் விளையாட்டு தொடர்பான நூல்கள் உள்ளன.

















ஏழாம் தளம்


இத்தளத்தில் வரலாறு,, புவியியல்,, வேதியியல்,, சுற்றுலா & பயண மேலாண்மை,, மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் உள்ளன.
















Jan 20, 2011

தொடர்பு முகவரி

முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர்

அண்ணா நூற்றாண்டு நூலகம்


கோட்டுர்புரம், சென்னை-600085

தொலை பேசி எண்: 04465515031



மின்னஞ்சல் : acl.librarians@gmail.com



View Larger Map

Jan 19, 2011

பொங்கல் கவிதை

தைத்திருநாள் எங்கள் தமிழர் திருநாள்

                                                                       --- இரவிகிருஷ்ணன்

மார்கழியின் கடைசிப் பனித்துளி
புல்லின் மேல் மின்னிட…
தென் தமிழச்சிகளின்
வண்ண கோலங்களில் வந்து பிறக்கிறாள் !


கழனி எங்கும் கதிர் முதிர
வந்துவிட்டது தமிழர் தினம்!


பொன்னு விளையற பூமிக்கு
பூப்புனித நீராட்டு விழா !


உழுது உழைத்த காளைக்கு
ஈரம் நிறைந்த மண்ணின்
வீரத் தாலாட்டு !


காளையரும் சேலையரும்
கழனிதனில் பெற்றெடுத்த
பொன்நெல் கொண்டு….. பொற்காலப் பானையில்
புதுப் பொங்கல் ஆரம்பம்!


மன்னர் தம் வீரம் கொண்டு
மறவர் குல மாணிக்கங்கள் - இங்கு
மதிப்பீடு செய்யப்படுகிறது !


புழுதிக் களத்திலே
மிரட்டும் விழிகளுடன்
இரட்டை ஈட்டிகள் தயாராயின !


சிலர் ஓரம் கட்ட 2
சிலரை ஓரம் கட்டியது !


சிங்கத்தமிழ் சிறுத்தைகள் சில
வழுவிழந்து மண்ணை முத்தமிட்டன!


விண்ணதிரும் ஒலிக்கரையில்
வியப்பு வண்ணம் விழிகள் பூக்க
வந்தான் ஒரு ஓவியன் !


பணிந்தான் அனைவருக்கும்
பணிந்தன இரட்டை ஈட்டிகள் !


விந்தை நிறை உலகிலே
வியப்புமிகு இத்திருநாள் !
ஆண்டாண்டு வந்தாலும்... அலுப்பதில்லை !


ஏக்கமாய்………… இன்னும் சில
காளைகள் முச்சிரைக்கின்றன !
முயன்று பார்க்க வாருங்களேன்!

Jan 12, 2011

நூலகம் தற்சமயம் காலை 9 மணியிலிருந்து மாலை 8 மணி வரை செயல்பட்டு வருகிறது .

Jan 6, 2011

பிரிவுகள்

பிரைய்ல் பிரிவு


  • வாசகர்களுக்கு வசதியாகத் தரைத்தளத்திலேயே பிரைய்ல் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது

  • ப்ரைய்ல் வாசிப்பு வசதியும் உள்ளது

  • குறுவட்டுத் தொகுப்புகள் உள்ளன

  • ப்ரெய்ல் வாசகர்களுக்கு உதவி செய்பவர்களும் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்

  • ப்ரெய்ல் எழுத்தில் நூற் பகுதிகலை உருவாக்கும் கருவி உள்ளது. அதில் படியெடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது
குழந்தைகள் நூற்பிரிவு

முதல் தளத்தில் 15000 சதுர அடிப் பரப்பில் குழந்தைகளுக்கென்று உருவாக்கப்பட்ட நூற்பிரிவு அமைந்துள்ளது


  • குழந்தைகள் விளையாடிக் கொண்டே படிப்பதற்கு ஏற்ற வகையில் செயற்கை மரமொன்றும், அவர்கள் கலை நிகழ்சிக்கென்று சிரிய மேடையும் அமைக்கப் பட்டுள்ளது

  • இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் அவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது

  • இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் குழந்தைகளுக்காகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன

நூற் சேகரிப்பும் வாசகர் சேவையும்


  • உலகெங்கிலுமுள்ள முன்னணிப் பதிப்பாளர்களிடமிருந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் நூல்கள் வாங்கப்பட்டிருக்கின்றன

  • பார்வைக் குறையுள்ளவர்களுக்காக பிரைய்ல் நூல்களும், ஒலி நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளன

  • செய்தித்தாள்களும், மாத, வார இதழ்களும் உள்ளன

  • குறிப்பு நூல்களுக்கான பகுதியும் உள்ளது

  • வசதியான வாசிப்புக் கூடங்கள் உள்ளன

  • பல்வகையான தமிழ் நூல்களும் ஆங்கில நூல்களும் வைக்கப்பட்டுள்ளன

  • பிற இந்திய மொழிகளின் நூல்களும் இடம் பெற்றுள்ளன

  • அரசு ஆவணங்கள் தொகுக்கப்பட்டுள்ளன

  • கொடையாக வழங்கப்பட்ட நூற்பிரிவு உள்ளது

  • ஒலி ஒளிப் பகுதி உள்ளது

  • அரிய நூல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன

  • புகைப்படத் தொகுப்புகள் உள்ளன

உலக இணைய மின் நூலகத்துடன் இணைப்பு


  • யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டதன் மூலம் நம் பண்பாட்டை உல்கறியவும் உலகப் பண்பாட்டை நாம் அறியவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது

மின் நூலகம்



  • கணினி வழியில் நூல்களை மின் பதிவாகத் தொகுத்து வைத்திருப்பது மின் நூலகம்

  • இங்கேயே உருவாக்கப்படும் மின் பதிவுகளைப் பயன்படுத்தலாம். பிற இடங்களில் தொகுக்கப் பெற்றிருக்கும் பதிவுகளையும் இணையத்தின் மூலம் பெறலாம்

  • மின் நூலகத்தில் செய்திகளைச் சேகரித்து வைத்துக் கொண்டு வேண்டும்பொழுது பயன்படுத்திக்கொள்ளும் வசதி உள்ளது

தன்னியக்கம்


  • நூலகத்தில் நூல்களை எடுப்பதும் திருப்புவதும் தன்னியக்க முறையில் உள்ளது

  • ஸ்மார்ட் அட்டைகள் மூலம் நூலகத்தைப் பயன்படுத்தலாம்

  • கண்காணிப்பு ஒளிப்படக் கருவிகள் மூலம் கணினியில் நூல்கத்தின் உள்ளும் புறமும் கண்காணிக்க முடியும்

  • RFID பதிவு மூலம் நூல்களின் இருப்பிடத்தை அறிய முடியும்

  • நூல்களைத் திருப்புவதற்கான பெட்டியில் போட்டவுடன் அவை தானாகவே வரவுப் பதிவு செய்யப்பட்டுவிடும்

பிணையம்


  • பிணையத்தில் இணைக்கப்பட்ட ஐநூற்றுக்கும் மேற்பட்ட கணினிகள் மூலம் படிக்கலாம்

  • மிகு விரைவாக அகலக்கூடிய கற்றை இணைப்புத் தரப்பட்டுள்ளது

வசதிகள்

  • 50,000 சதுர அடியில் 1280 பேர் அமரக்கூடிய முழுவதும் குளிரூட்டப்பட்ட உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய அரங்கு உள்ளது

  • 800 பேர் அமரக்கூடிய திறந்த வெளிக் கலையரங்கு உள்ளது

  • 151 பேர் அமரும் வசதி கொண்ட கூட்ட அரங்கம் உள்ளது

  • 30 பேர் அமரக்கூடிய சிற்றரங்கு உள்ளது
  • நூல் வெளியீட்டு அரங்குகளும், கருத்தரங்க அறைகளும் உள்ளன

  • இயற்கை ஒளி புகும் வகையில் அழகிய முற்றம் அமைக்கப்பட்டுள்ளது

  • 417 கார்கள் மற்றும் 1026 இரு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிடம் உள்ளது

  • ஆய்வு செய்பவர்களுக்கான தங்கும் வசதி உள்ளது

  • எல்லாத் தளங்களுக்கும் மின் தூக்கி வசதியும், கழிவறைகளும் உள்ளன.

  • மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டிற்கான அனைத்து வசதிகளும் உள்ளன.

  • தூய்மையான சுவையான பலவகையான உணவுகளையும், பானங்களையும் வழங்கும் உணவு விடுதி உள்ளது.

நோக்கம்

  • மனிதப் படைப்பாற்றலுக்கும் அறிவிற்கும் வெற்றிக்கும் தேவையான தரவுகளைக் கட்டமைத்துப் பாதுகாத்துத் தருதல்
  • நடுநிலையான மனவளர்ச்சியையும், புரிந்துணர்வையும், சக மனிதப் புரிதலையும், அமைதி உணர்வையும் வளர்த்தல்

செயற்பாடுகள்

  • நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்தரும் வகையிலான அறிவைத் தருதல்
  • எதிர்கால சந்ததியினருக்குத் தேவையான அறிவையும் படைப்புத் திறனையும் நிலை நிறுத்துதல், பாதுகாத்தல்
  • உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய இணையப் பயன்பாட்டு வசதி உடன் கால ஆய்வை வளர்த்தல், நூலகச் சேவையைப் பெருக்குதல்
  • இந்தியாவிலும் வெளிநாட்டிலுமுள்ள நூலகங்களுடன் இணைந்த சேவைகளை வழங்குதல்
  • பன்னாட்டுப் பண்பாட்டுப் பரிமாற்றத்தை ஊக்குவித்தல், பன்னாட்டு நூலகச் சங்கங்கள் மற்றும் இத்தகைய உலக அமைப்புகள் ஆகியவற்றின் நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ளுதல்

அறிமுகம்

அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம் சென்னை கோட்டுர்புரம் பகுதியில் அரசு தகவல் தொகுப்பு மையத்திற்கு அருகில் உள்ள 8 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 3.75 லட்சம் சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற சிறப்பினைப் பெற்றுள்ள இந்த நூலகம் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 15, தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களின் நினைவாக, மாண்புமிகு முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

Jan 4, 2011

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்





















பெயர் : *



மின்னஞ்சல் முகவரி : *





ஆலோசனைகளை / கருத்துக்களை பதிவு செய்யவும் *








உங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பதிவு செய்யவும்




பெயர் *
மின்னஞ்சல் முகவரி: *
ஆலோசனைகள்/கருத்துக்கள் *
* RequiredCreate Contact Forms




Jan 2, 2011

வசதிகள்



நமது நூலகம் 1250 பேர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்க கூடிய இடவசதி கொண்டது.

கலையரங்கம் :




முற்றிலும் குளிரூட்டப்பட்ட 50000 சதுர அடி பரப்பளவு கொண்ட மிகப்பெரும் தனி கலையரங்கம் உள்ளது. 1100 நபர்கள் அமரக்கூடிய இருக்கை வசதிகள் இதன் சிறப்பம்சம் ஆகும்.




திறந்தவெளி கலையரங்கு :

800 பேர் அமரக்கூடிய திறந்தவெளி ஒலி-ஒளி அரங்கு நூலக வளாகத்தினுள் அமைந்துள்ளது.






கருத்தரங்கு கூடம்:
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 151 நபர்கள் அமரும் வசதி கொண்ட கருத்தரங்கு நூலகத்தினுள் அமைந்துள்ளது.
மேலும் 30 பேர் அமரக்கூடிய சிறிய கருத்தரங்குகள் நூலகத்தின் தளங்களில் அமைந்துள்ளன. நூல் வெளியீட்டு அறைகளும் கருத்தரங்க அறைகளும் உள்ளன.


வாகன நிறுத்துமிடம்:


இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான பாதுகாப்பான பரந்த அமைவிடம் உள்ளது. இதில் 400 நான்கு சக்கர வாகனங்களும், 1200 இரு சக்கர வாகனங்களும் நிறுத்தும் வசதி உள்ளது.


மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக...:
மாற்றுத் திறனாளிகள் நூலகத்தை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களின் வசதிக்காக பிரத்யேக கழிவறைகள் மற்றும் சரிவுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நூலகத்தில் அவர்களின் இயக்கத்தை எளிதாக்க சக்கர நாற்காலிகள் உள்ளன.




சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு :


பயனாளர்கள் தங்கள் சொந்த நூல்களை கொண்டு வந்து படிப்பதற்கான தனி பிரிவு உள்ளது. உரிய அனுமதியுடன் வாசகர்கள் தங்கள் புத்தகங்களை குறிப்பிட்ட பகுதிக்குள் பயன்படுத்தலாம்.




மின்தூக்கி மற்றும் கழிவறை:
நூலகத்தின் ஒவ்வொரு தளத்திலும் மின்தூக்கி மற்றும் கழிவறை அமைந்துள்ளது.

அழகிய முற்றம்:
இயற்கை ஒளி புகும் வகையில் அழகிய முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் தொடங்கப்படவுள்ள வசதிகள்:
இணைய மின் நூலகம்:
கணினியில் சேமிக்கப்பட்ட தகவல்கள் அடங்கிய இணைய மின் நூலகம் விரைவில் அமைய உள்ளது. புத்தகங்களுடன் 2 லட்சத்துக்கும் அதிகமான மின் புத்தகங்களும், 20000 -க்கும் மேற்பட்ட மின் சஞ்சிகைகளும் அதில் இடம்பெறவிருக்கின்றன.


உணவக வசதி:
நமது நூலகம் வாசகர்களின் அறிவுப்பசி ஆற்றுவதோடு, அவர்தம் ஆரோக்கியத்திற்கும், தூய்மையான சுவையான உணவுகளையும் பானங்களையும் வழங்கும் உணவு விடுதி வரவிருக்கிறது.


ஆய்வு செய்வோருக்கான விடுதி வசதி:
வளாகத்தின் உள்ளே ஆய்வு மேற்கொள்ளும் இந்திய, அயல் நாட்டு வாசகர்களுக்கான தரமான விடுதி வசதி அமையவிருக்கிறது.

Jan 1, 2011

ஊடகச் செய்திகள்

"என் கைக்குட்டை" - குழந்தைகளுக்கான பயிற்சி பட்டறை.

முனைவர். வேலு சரவணனுடன் ஒரு தேநீர் சந்திப்பு..!

கடல் பூதம் - குழந்தைகளுக்கான நாடகம்

உலக மூளைச்சிதைவு (Autism) நோய் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி

ஜப்பான் நாட்டு பொம்மைகள் கண்காட்சி

ரஷிய தூதரகப் பள்ளியின் கண்காட்சி

குடியரசு தின விழா

பொங்கல் விழா !



அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழக மக்களால் அன்புடன்"அண்ணா" என்றழைக்கப்படும் முன்னாள் தமிழக முதல்அமைச்சர் மாண்புமிகு. சி. என். அண்ணாதுரை அவர்களின்102 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, 2010 -ஆம் ஆண்டுசெப்டெம்பர் 15 -ஆம் தேதியன்று முன்னாள் தமிழக முதல்அமைச்சர் டாக்டர். மு.கருணாநிதி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையான நூலகமான நமது நூலகத்தின் கால்கோள் விழா முன்னாள் தமிழக முதல் அமைச்சர் டாக்டர். மு.கருணாநிதி அவர்களால் 2008 -ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16 -ஆம் நாள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது.

நூல்கள் மற்றும் கற்பதில் அண்ணா அவர்கள் கொண்ட பற்று மற்றும் தீராத ஆர்வத்தை மரியாதை செய்யும் பொருட்டு நமது நூலகத்திற்கு அன்னாரின் நூற்றாண்டை நினைவுறுத்தும் விதமாகவும் "அண்ணா நூற்றாண்டு நூலகம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

3.75 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள நம் நூலகம் தரைதளம் நீங்கலாக 8 தளங்களை கொண்டது. தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த 5 லட்சம் புத்தகங்களை தன்னகத்தே கொண்டுள்ள நமது நூலகம், மிகவும் குறுகிய காலத்தில் 12 லட்சம் புத்தகங்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது.
நமது நூலகம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நமது நூலகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக "உலக இணைய மின் நூலகத்துடன்" (World Digital Library)இணைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மூலம் நம் பண்பாட்டை உலகறியவும், உலகப் பண்பாட்டை நாமறியவும் சிறப்பானதொரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் 31 மாவட்ட நூலகங்களையும் கன்னிமரா நூலகத்துடன் இணைக்கும் கணினி இணைப்பு தற்போது செயலாக்கத்தில் உள்ளது. இந்த அனைத்து இணைப்புகளும் நமது "அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன்" இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
Thanks for Your Visit : Blog & Website Team, ACL